Friday 3rd of May 2024 08:42:40 PM GMT

LANGUAGE - TAMIL
-
கடல்புதையல் ஆம்பல் (ஆம்பர்) கொண்டு சென்ற நபர்கள் நால்வர் வட்டுவாகலில் சிக்கினர்!

கடல்புதையல் ஆம்பல் (ஆம்பர்) கொண்டு சென்ற நபர்கள் நால்வர் வட்டுவாகலில் சிக்கினர்!


மிகப்பெறுமதி மிகக் கடல் புதையலாக கருதப்படும் ஆம்பல் எனப்படும் ஆம்பர் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனைக் கொண்டு சென்ற சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டரைக் கிலோ எடைகொண்ட குறித்த ஆம்பல் / ஆம்பரின் பெறுமதி பல கோடி ரூபாவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைக்கபெற்ற தகவலை அடுத்தே வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு கைது இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.

கைதானவர்கள் அனுராதபுரம் மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE